வண்ணாரப்பேட்டையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மேலப்பாளையம் விலக்கு அருகே இன்று அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.