மேலப்பாளையம் பகுதியில் நான்கு வயது சிறுமி நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அந்த சிறுமிக்கு ஏற்கனவே நுரையீரலில் சுவாச பிரச்சனை இருந்து, 50 நாட்களுக்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நிமோனியா காய்ச்சலால் சிறுமி இறந்ததாக பரவும் செய்திகளுக்கு மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.