நெல்லை: லாட்டரி விற்ற நபர் கைது

694பார்த்தது
நெல்லை: லாட்டரி விற்ற நபர் கைது
நெல்லை சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குமாரசாமி கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்சன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 320 லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரூ. 2000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Job Suitcase

Jobs near you