அம்பாசமுத்திரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்ட அதிகாரிகளுடன் வியாபாரிகளும், மக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி, ஆவின் பாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற மறுத்து அதிமுக துணைச் செயலா் மாரிமுத்து தலைமையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளுக்கு 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், தவறும்பட்சத்தில் கடைகள் அப்புறப்படுத்தப்படும் என்றும் பொறியாளர் கூறினார்.