மேலப்பாளையம் 44 வது வார்டில் தவ்ஹீத் பள்ளி ரோட்டில் புதுமனை முதல் தெரு மற்றும் காயிதே மில்லத் தெரு இடையே உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சனையை மாநகராட்சி உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.