மதுரை கொக்கிரகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கருப்பு நிற பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்குப் பிறகு சுமார் 5½ அடி நீளமுள்ள கருஞ்சாரைப் பாம்பைப் பிடித்துச் சென்றனர்.