நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்துறையினர் வாகன சோதனையின் போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களின் இந்த சிறப்பான நடவடிக்கையை பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார், IPS இன்று எஸ்பி அலுவலகத்தில் நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி அனைவரையும் பாராட்டினார். இந்த நிகழ்வு காவல்துறையினரின் திறமையான செயல்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.