விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் திருடுபோனது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இருவர் பைக்கை தள்ளிச் செல்லும்போது போலீசில் பிடிபட்டனர். விசாரணையில், அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும், மற்றொருவர் தங்க ராஜா என்பதும் தெரியவந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட்டுச் செல்ல முயன்றபோது அவர்கள் பிடிபட்டனர்.