திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெள்ளித் தேர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளித் தேரில் வீதி உலா வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருள, பக்தர்கள் "நமச்சிவாய" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.