திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வெள்ளிக்கிழமை அன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி முருகன் முத்துக்குமார் (27) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாப்பாக்குடி போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.