நெல்லை டவுன் பகுதியில் நேற்று (பிப்.22) செல்வம் என்ற வாலிபர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்டார். மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த செல்வத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.