நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார். இப்போ ஆட்சியில் உள்ளவர்கள் தில்லாக இதை சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். இரண்டரை வயது குழந்தையை கொன்ற திமுக நிர்வாகியை என்ன செய்தீர்கள் ஸ்டாலின் சார் என ஆவேசமாக பேசினார். நாங்குநேரி பிரச்சனையை ஏன் தடுக்கவில்லை என்றும் பேசினார்.