நாளை மறுதினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்க மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் இன்று குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பொட்டு குட்டி, செங்குட்டி, மகிழம்பாடி உள்ளிட்ட ஆடு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. ஒரே நாளில் சுமார் ரூ. 4 கோடி வரை ஆடுகள் விற்பனையானது.