நெல்லை; புறநகர் பகுதியில் கனமழை

0பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் வெயில் இன்றி பனி மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, புறநகர் பகுதியான பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் இன்று பிற்பகல் திடீரென கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தொடர்புடைய செய்தி