சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், தாமிரபரணி ஆற்றில் தற்போது 19000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மழை நிலவரங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மாவட்ட ஆட்சியர் முதல்வருக்கு தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.