உள்ளூர் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீட்டு உபயோகத்திற்காக வண்டல் மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரால் உறுதிசெய்யப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.