நெல்லை டவுன் செல்லும் வழியில் ஸ்ரீபுரம் சன்னதி தெருவில் சாலையில் சுமார் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டதால் வாகனங்கள் நிலைதடுமாறி செல்கின்றன. இதனால், பள்ளத்தை முழுமையாக சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.