நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் பொதுமக்களிடம் இருந்து 18 மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் உறுதியளித்தார்.