மானூர் புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஒரே பைக்கில் வந்த 3 பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். விசாரணையில் அவர்கள் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மானூர் போலீசார் இன்று அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.