சுத்தமல்லி வ. உ. சி நகர் அல்மதீனா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த புரோட்டா கடை உரிமையாளர் சாதிக்(28) என்பவரின் வீட்டின் சுவரில் நேற்றிரவு மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பாக சாதிக் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.