பேட்டை; அங்கன்வாடி முன்பு ஆபத்தான மின் கம்பம்

289பார்த்தது
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள குழந்தைகள் மையம் முன்பு உள்ள மின்கம்பம் முற்றிலும் அரித்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி