தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரதிஷ் (36) மற்றும் நெல்லையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தனர். இவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இருவரும் இன்று பாளை சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.