நெல்லை: அரிவளால் தாக்குதல்.. சுட்டுப்பிடித்த போலீசார்

1163பார்த்தது
நெல்லை: அரிவளால் தாக்குதல்.. சுட்டுப்பிடித்த போலீசார்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்தடுத்து பொதுமக்கள் மீது பைக்கில் வந்து அரிவாளால் வெட்டிக் காயம் ஏற்படுத்திய கும்பலை சேர்ந்த ஐயப்பன் என்பவரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐயப்பனை பிடிக்க முயன்ற போது காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி