மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நெல்லை சிவன் கோவில்களில் நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கு வலம் வந்தனர். இன்று அதிகாலை நடைபெற்ற நான்காம் கால பூஜையில் காந்திமதி அம்மன் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.