நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி (48) என்பவர் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அவரது இறப்பிற்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.