நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

1பார்த்தது
அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். வரலாறு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி