நெல்லை காவல் சரகத்திற்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரிந்த 38 காவல் ஆய்வாளர்கள் நேற்று பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி (பொ) தேஷ்முக் சேகர்
சஞ்சய் உத்தரவில் தெரிவித்துள்ளார்.