நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், அவரது காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை போலீஸ் எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சுர்ஜித்தின் தாயாரும் போலீஸ் எஸ்ஐ-யுமான கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். அவர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.