நெல்லை லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிகோபாலகிருஷ்ணன் (27) போக்சோ வழக்கில் கைதானார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் மகளிர் போலீஸ் எஸ்பிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் எஸ்பி பிரசன்ன குமார் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில், நேற்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.