ஆய்வுக்கு சென்ற இடத்தில் எம்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி

0பார்த்தது
ராமையன்பட்டியில் இறைச்சி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் மற்றும் எம்எல்ஏ ஆர். எஸ் முருகன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோழி கழிவுகள் ஏற்றி வந்த லாரியை திறந்து பார்த்தபோது, கடும் துர்நாற்றம் வீசியதால் இருவரும் மூக்கைப் பிடித்துக் கொண்டனர். இந்த நிறுவனத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.