நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் உள்ள அருள்தரும் அன்னை தேவி ஸ்ரீ உலகம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருமால் பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.