முக்கூடல்: ஆற்றில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு

3பார்த்தது
முக்கூடல்: ஆற்றில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு
முக்கூடல் அருகே அத்தாள நல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டு என்பவர் நேற்று மாலை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது மாயமானார். தீயணைப்புத் துறையினர் இன்று காலை முதல் அவரை தேடி வந்த நிலையில், தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பட்டு குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.