நெல்லை மாநகரில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டவுன் காமாட்சியம்மன் கோயிலுக்குள் இன்று மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் மின் மோட்டார் மூலம் கோயிலில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை பாதிப்பு பொதுமக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.