நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டியது. சிங்கம்பட்டி அருகே மாஞ்சோலை பகுதியில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு 49 கன அடி மட்டுமே நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 154 கன அடியாக அதிகரித்தது. அதேபோல் பாபநாசம் அணைக்கும் நீர்வரத்து 264 கன அடியாக அதிகரித்துள்ளது.