நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின் பேரில், நீண்ட காலமாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத மேலப்பாளையம் மண்டலம் குறிச்சியில் உள்ள ஒரு குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், தச்சநல்லூர் மண்டலம் பெருமாள் மேல ரதவீதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையும் மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.