சமபந்தியில் நடந்தது என்ன? சபாநாயகர் அதிரடி பேட்டி

1பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த பேட்டியில், நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் குழந்தைகள் தடுக்கப்பட்டதாக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை எனத் தெரிவித்தார். சமபந்தி விருந்தில் யாரையும் தடுத்து நிறுத்த ஆட்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், இது வணிகத்திற்காக தயாரிக்கப்பட்ட செய்தி என்றும் அவர் கூறினார். இதுபோன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி