
பைக்கை திருட முயன்றவருக்கு ஆறு மாதம் சிறை
கடந்த 2025 ஆம் ஆண்டு நெல்லை பாளையம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரது இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வழக்கில், மருதூர் பகுதியைச் சேர்ந்த துரை (28) என்பவருக்கு நெல்லை நீதிமன்றம் இன்று 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதி ஜெயசங்கரகுமாரி இந்த தீர்ப்பை வழங்கினார். குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.






































