நெல்லை: விபத்தை தடுக்க சாலையில் கோடு

79பார்த்தது
நெல்லை: விபத்தை தடுக்க சாலையில் கோடு
நெல்லை சந்திப்பில் பழமை வாய்ந்த ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலமான இந்த பாலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி லேசான விபத்து ஏற்படுகிறது. எனவே பாலத்தின் சாலையில் நடுவே விபத்தை தடுக்க கோடு வரைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று இன்று சாலை நடுவே புதிதாக கோடு வரையப்பட்டுள்ளது.