பாளையில் தலைமை காவலர் தங்கவேல் முருகன், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனது சம்பளத்தில் காப்பீடு தொகை செலுத்தியுள்ளார். அவரது மனைவியின் மருத்துவ செலவு ரூ. 6,73,009 ஆன நிலையில், காப்பீட்டு நிறுவனம் ரூ. 1,33,303 மட்டுமே வழங்கியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், காப்பீட்டு நிறுவனம் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 6,29,644 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.