இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி இன்று நெல்லைக்கு வருகை தந்து, மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்தார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் குறித்து அவர் ஆலோசனைகளை மேற்கொண்டார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எந்த நிலையில் உள்ளது, இதுவரை எத்தனை வாக்காளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அவர் கேட்டறிந்தார்.