நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை என அறிவித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போதுமான நிதி இல்லை, கட்டிடங்கள் பழுதாக உள்ளது என பல்வேறு காரணங்களை காட்டி விழாவை நிறுத்தியதை கண்டித்து பக்தர்கள் சாலையில் துண்டு விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.