பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல்நிலைய போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ராமச்சந்திரன் (63) என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.725 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.