மழைநீரில் மீன்பிடித்து நூதன போராட்டம்
நெல்லை மாவட்டம் கீழ நத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேடிசி நகரில் உள்ள கற்பகம் நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து, அப்பகுதி மக்கள் மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.