தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நாகேந்திரனை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் இன்று நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஜான்பாண்டியன் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.