தமிழக சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, தனது தந்தை பெருமாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, இரவு முழுவதும் அங்கேயே தங்கினார். மக்கள் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அமைச்சர் அறிவுறுத்திய நிலையில், அமைச்சர் மதன் ராஜா ஒரு முன்னுதாரணமாகத் தனது தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்.