தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை மூலம் கல்லறை தோட்ட சுற்றுச்சுவர் கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. நெல்லை, பாளையம்கோட்டையில் உள்ள சிவந்திப்பட்டி கிராமத்தின் தூய இம்மானுவேல் ஆலய கல்லறை தோட்ட சுற்றுச்சுவர் கட்ட மாநில அரசின் நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்களை சிஎஸ்ஐ தியாகராஜநகர் சேகர தலைவர் ஆயர் ஜான் சாமுவேல், சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் சகோ.ஜெபசிங் அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் சபை ஊழியர் மைக்கேல், சபை மூத்த ஊழியர் மாசிலாமணி மற்றும் அதிசயமணி ஆகியோரும் உடனிருந்தனர்.