நெல்லை: புதிதாக கட்டப்படும் பாலத்தில் எம்எல்ஏ அதிரடி ஆய்வு

83பார்த்தது
நெல்லை: புதிதாக கட்டப்படும் பாலத்தில் எம்எல்ஏ அதிரடி ஆய்வு
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சிவந்திபுரம் ஊராட்சி அகஸ்தியர் பட்டி தாயுமானவர் தெருவில் ஊராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் தரம் இல்லாமல் பணி நடைபெறுவதாக எம். எல். ஏ இசக்கி சுப்பையாவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேரில் சென்று பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் தரமாக கட்டி கொடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தனர்.