டவுன் அருணகிரி தியேட்டர் ரோட்டில் வாட்டர் டேங் அருகே சாலையில் கிடந்த ரூ. 50,000 ரொக்கப் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது உஸ்மானி கண்டெடுத்துள்ளார். அவர் நேர்மையுடன் அந்தப் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அந்தப் பணம் டவுனைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் இன்று மாரியப்பனிடம் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டினர்.