டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை கண்ணனின் திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.