நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று திடீரென கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு செய்தார். இங்கு ஏசி பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் சில மாதங்களிலேயே ஏசி பழுதாகி பேருந்து நிலையம் பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ராமகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.